உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூலையில் உச்சம் தொட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகள்

ஜூலையில் உச்சம் தொட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனைகள்

புதுடில்லி: கடந்த மாதம், 1,947 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிமாற்ற கழகம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்துக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தரவுகளை என்.பி.சி.ஐ., வெளியிட்டு உள்ளது. இதில் யு.பி.ஐ., மட்டுமல்லாது ஆதார் முறையிலான பேமென்ட்ஸ் மற்றும் ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணம் செலுத்த பயன்படும் பாஸ்டேக் பரிவர்த்தனைகள் சற்று குறைந்துள்ளது.https://x.com/dinamalarweb/status/1951462901967188063கடந்த மாதம் தினசரி யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்து 62.80 கோடியாகவும்; மதிப்பு 22 சதவீதம் உயர்ந்து 80,919 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ