உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  விவேக்ஸ் ஷோரூம்கள் மூடல்

 விவேக்ஸ் ஷோரூம்கள் மூடல்

சென்னை: தமிழகத்தின் நுகர்வோர் சாதனங்கள் விற்பனை நி றுவனமான 'விவேக்ஸ்', 60 ஆண்டுகளுக்கு பின், பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்களை மூடியுள்ளது. சென்னை மயிலாப்பூரில் 1965ல் 'விவேக்ஸின்' முதல் விற்பனை நிலையத்தை லட்சுமி நாராயண செட்டி தொடங்கினார். பின்னர், புரசைவாக்கம், தி.நகர் கிளைகள் தொடங்கப்பட்டன. நிறுவனருக்கு பிறகு அவரது சகோதரர் கோதண்டராமன் செட்டி, நிறுவனத்தை நடத்தினார். இந்நிலையில், நங்க நல்லுார், சேலையூர், வடபழனி ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் செயல்பட்ட விற்பனை மையங்களை வசந்த் அண்டு கோ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தில் 15,000 சதுர அடி பரப்பிலான கிடங்கையும் வசந்த் அண்டு கோ எடுத்துள்ளது. கடந்த 2010ல், நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் தொழில் போட்டி, ஆன்லைன் வர்த்தக சவால் அதிகரித்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்