உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / 50% வீழ்ச்சியில் எஸ்.எம்.இ., பங்கு வெளியீடுகள்

50% வீழ்ச்சியில் எஸ்.எம்.இ., பங்கு வெளியீடுகள்

நடப்பு ஆண்டில் இதுவரை ‘மெயின்போர்டு’ பங்கு வெளியீடுகள் லாபகரமாகவும், எஸ்.எம்.இ., பங்கு வெளியீடுகள் பெரும்பாலும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக சந்தை தரவுகள் கூறுகின்றன. மெயின்போர்டு பிரிவில் இதுவரை 92 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், 29 பங்குகள் ஐ.பி.ஓ., விலையை விட குறைந்த விலைக்கு வர்த்தகமாகின்றன. அதாவது, 32 சதவீத பங்குகள் விலை இறங்கியுள்ளன. மேலும், ஆறு பங்குகள் 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளன. மெயின்போர்டு பங்குகளில் கிடைத்த சராசரி வருமானம் 24 சதவீதமாக இருந்துள்ளது. எஸ்.எம்.இ., பிரிவில் பட்டியலிடப்பட்ட 161 பங்குகளில், 81 பங்குகள் ஐ.பி.ஓ., விலையை விட குறைந்த விலையில் வர்த்தகமாகின்றன. அதாவது, 50 சதவீத பங்குகள் விலை சரிந்துள்ளன. முக்கியமாக, 24 பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் விழ்ச்சி அடைந்துள்ளன. எஸ்.எம்.இ., பங்குகள் சராசரியாக 0.20 சதவீதம் நஷ்டத்தை கொடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை