அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 5% உயர்வு
'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், கூடுதல் மூலதனத்தை திரட்ட, 24,930 கோடி ரூபாய் மதிப்பில் உரிமைப் பங்குகள் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 1,800 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது, நேற்றைய விலையோடு ஒப்பிடுகையில், 24 சதவீதம் தள்ளுபடி விலையாகும். உரிமைப் பங்குகள் வெளியீட்டில் பங்கேற்க விரும்பும் தற்போதைய பங்குதாரர்கள், வரும் 25 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு காரணமாக, கடந்த மே 12ம் தேதிக்கு பின், நேற்றைய வர்த்தக நேரத்தின்போது, இந்நிறுவன பங்குகள் 6 சதவீதம் உயர்வு கண்டு, 2,517 ரூபாயாக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில், 5 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தன. உரிமைப் பங்குகள் வெளியீடு வாயிலாக திரட்டப்படும் தொகையை, விமான நிலையம், சாலைகள் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆகிய தொழில்களுக்கு பயன் படுத்த இருப்பதாக இந்நிறு வனம் தெரிவித்துள்ளது.