ஹெச்.டி.எப்.சி., வங்கியை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல்
'ஹெச்.டி.எப்.சி., வங்கி'யை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக, 'பார்தி ஏர்டெல்' உருவெடுத்துள்ளது. இந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்துக்கு, ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் சராசரி வருவாய் 245 ரூபாயிலிருந்து 257 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏர்டெல் இந்தியாவின் வருவாய், ஆண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் உயர்ந்து, 39,566 கோடி ரூபாயாக உள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சிறந்த வருவாய் ஈட்டல் காரணமாக, மொபைல் சேவை வருவாய் 8.30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பங்கின் விலை 1,953.80 ரூபாயாக வர்த்தகமானது. வர்த்தக நிறைவில், 1,938.10 ரூபாய்க்கு முடிந்தது.