உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘கார்ப்பரேட் பாண்டு பியூச்சர்ஸ்’ தேசிய பங்கு சந்தைக்கு அனுமதி

‘கார்ப்பரேட் பாண்டு பியூச்சர்ஸ்’ தேசிய பங்கு சந்தைக்கு அனுமதி

கார்ப்பரேட் கடன் பத்திர குறியீடுகளின் அடிப்படையில், ‘பியூச்சர்ஸ்’ வர்த்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு, தேசிய பங்கு சந்தைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது. முன்பாகவே, இதற்கு செபியும் அனுமதி வழங்கி இருந்தது. இந்த பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களின் வாயிலாக, கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் ரிஸ்க்கை குறைத்துக்கொள்வதற்காக ‘ஹெட்ஜிங்’ செய்துகொள்ளலாம். இண்டெக்ஸ் சேவைகள் வழங்க பி.எஸ்.இ.,க்கு செபி அனுமதி மும்பை பங்கு சந்தையின் துணை நிறுவனமான ‘பி.எஸ்.இ., இண்டெக்ஸ் சர்விசஸ்’, சந்தை சார்ந்த இண்டெக்ஸ் சேவை வழங்குனராக செயல்படுவதற்கு செபியிடம் பதிவு பெற்றுள்ளது. இந்நிறுவனம் சென்செக்ஸ், பி.எஸ்.இ., 100 மற்றும் பி.எஸ்.இ., 500 உள்ளிட்ட முக்கிய பங்கு சந்தை குறியீடுகளை நிர்வகித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி