உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் இ-பிராப்தி
ப யன்படுத்தப்படாத பழைய பி.எப்., கணக்குகளில் தேங்கி கிடக்கும் பணத்தை பயனர்கள் எளிதாக பெறுவதற்காக, 'இ-பிராப்தி' என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வாயிலாக யு.ஏ.என்., எண் இல்லாத பழைய கணக்குகளை ஆதார் உதவியுடன் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். முக்கிய அம்சங்கள் கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை மாறி, யு.ஏ.என்., எண் இல்லாமல் போன பழைய பி.எப்., கணக்குகளை இந்த தளம் வாயிலாக கண்டறியலாம். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு சரிபார்த்து, பழைய கணக்கை பயனர்கள் தற்போதைய யு.ஏ.என்., எண்ணுடன் இணைக்க முடியும். பழைய பி.எப்., கணக்குகளில் விடுபட்ட தகவல்களை சரிசெய்து, அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.