உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு

 இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு

தொ ழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான 'இ.பி.எப்.ஓ.,' 2025- - 26ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இதே வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளது. இ.பி.எப்.ஓ.,வின் இந்த முடிவு, முறைப்படி மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் கிடைத்தவுடன், வட்டித் தொகை ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இ.பி.எப்., வட்டி நிலவரம்: 2025-26 : 8.25% 2024-25 : 8.25% 2023-24 : 8.25% 2022-23 : 8.15% 2021-22 : 8.10%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை