உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஆறு மடங்கு அதிகரித்த கோல்டு இ.டி.எப்., முதலீடு

 ஆறு மடங்கு அதிகரித்த கோல்டு இ.டி.எப்., முதலீடு

கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இத்திட்டங்களில் 31,561 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5,654 கோடி ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும். கடந்த ஜனவரியுடன் ஒப்பிடும்போது, மார்ச் மாத முதலீடு குறைவாகத் தெரிந்தாலும், சந்தையின் நிச்சயமற்ற சூழலில், முதலீட்டை பரவலாக்க தங்கம் இன்னும் ஒரு சிறந்த கருவியாக முதலீட்டாளர்களால் விரும்பப்படுவது தெளிவாகத் தெரிகிறது. - நேஹால் மேஷ்ரம் மார்னிங்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச் இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ