உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இரண்டாவது நாளாக சரிந்த தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள்

 இரண்டாவது நாளாக சரிந்த தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள்

உலகளாவிய சந்தையில் தேவை குறைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,கள் நேற்று 4 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இ.டி.எப்.,கள் இறக்கத்துடன் நிறைவு செய்துள்ளன.சந்தை நிபுணர்கள் கருத்து:கடந்த இரண்டு நாட்களாக கமாடிட்டி சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது ஆகியவை காரணம். சமீபத்திய உயர்வுக்கு பின், தங்கள் போர்ட்போலியோவில் 25 முதல் 30 சதவீதத்துக்கு மேல் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட அளவுக்கு லாபமாக பதிவு செய்து வருகின்றனர். புதிய முதலீட்டாளர்கள், தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் போது அவசரப்பட்டு வாங்காமல், விலை சரியும் போது, இ.டி.எப்., அல்லது தங்க பத்திரங்கள் வாயிலாக, சிறுக, சிறுக முதலீடு செய்யலாம். வெள்ளியை பொறுத்தவரை, சந்தை சீராகும் வரை, புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.தங்க இ.டி.எப்., சரிவு(17-02-26)4% : பரோடா பி.என்.பி பரிபாஸ் கோல்டு ETF2% : யூ.டி.ஐ., நிப்பான் இந்தியா, ஜீரோதா, ஹெச்.டி.எப்.சி.,எம்.சி.எக்ஸ்., விலை நிலவரம் (17-02-26)தங்கம் (10 கிராம்): ரூ1,53,550 (ரூ.1,210)வெள்ளி (1 கிலோ): ரூ.2,35,206 (ரூ.4,685)வெள்ளி இ.டி.எப்., சரிவு(17--02--26)4% : எடெல்வெய்ஸ் சில்வர், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சில்வர்3% : ஜீரோதா சில்வர்2% : கோட்டக், டாடா, குரோ, எஸ்.பி.ஐ., டி.எஸ்.பி சில்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை