உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

கனரா எச்.எஸ்.பி.சி., லைப் பங்கு விலை ரூ.106

'க னரா எச்.எஸ்.பி.சி., லைப் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் 2,516 கோடி ரூபாய் மதிப்பிலான ஐ.பி.ஓ., வரும் 10ம் தேதி துவங்குகிறது. இதற்கான பங்கு விலை, 100 - 106 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள், வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், திரட்டப்படும் தொகை முழுதும் அவர்களுக்கே சென்று சேரும். கடந்த 2007ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், கனரா வங்கி 51 சதவீத பங்குகளும்; 'எச்.எஸ்.பி.சி., இன்சூரன்ஸ் ஹோல்டிங்க்ஸ்' நிறுவனம் 26 சதவீத பங்குகளும் வைத்துள்ளன.

செபியிடம் அனுமதி கேட்கும் அசோசியேட்டட் பவர்

'அசோசியேட்டட் பவர் ஸ்ட்ரக்சர்ஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 400 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. புதிய பங்குகள் தவிர நிறுவனர்களின் 71.43 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான நிறுவனமான இது, திரட்டப்படும் தொகையில் 320 கோடி ரூபாயை, கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகை, பொதுவான நிறுவன தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி, நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு 3,790 கோடி ரூபாயாக இருந்தது.

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்: 100% விண்ணப்பம்

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் 11,607 கோடி ரூபாய் ஐ.பி.ஓ., முதல் நாளிலேயே முழுதுமாக விண்ணப்பிக்கப்பட்டது. மொத்தம் 7.13 கோடி பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், 7.45 கோடி பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.பிரிவு வாரியாக பார்க்கும்போது, சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 81 சதவீதமும்; நிறுவனம் சாரா முதலீட்டாளர்கள் 231 சதவீதமும்; நிறுவன முதலீட்டாளர்கள் 49 சதவீதமும் விண்ணப்பித்துள்ளனர். பங்கு விலை 1,080 - 1,140 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை