உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

'பவரிகா லிமிடெட்' மி ன் சக்தி மற்றும் ஜெனரேட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'பவரிகா' நிறுவனம், புதிய பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக, 700 கோடி ரூபாயையும், 'ஆபர் பார் சேல்' முறையில் 400 கோடி ரூபாயையும் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. ஐ.பி.ஓ., காலம் : மார்ச் 24 - 27 வரை விலை வரம்பு : ரூ.375 - 395 பட்டியலிடப்படும் தேதி : ஏப்ரல் 2, 2026 குறைந்தபட்ச முதலீடு : ரூ.14,615; ஒரு லாட் (37 பங்குகள்) முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு: நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதம், பெரிய முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம், சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதம் பணியாளர்கள் சலுகை: 'பவரிகா' பணியாளர்களுக்கு ஒரு பங்குக்கு 37 ரூபாய் தள்ளுபடி நோக்கம்: இந்த ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியில், 525 கோடி ரூபாயை தன் கடன்களை அடைக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது, நிறுவனத்தின் வட்டி சுமையை குறைத்து, லாபத்தை அதிகரிக்க உதவும். மீதமுள்ள தொகை இதர செலவுகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. 'சாய் பேரன்டரல்ஸ்' ம ருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வரும் 'சாய் பேரன்டரல்ஸ்' நிறுவனம், 285 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளை வெளியிடவும், 31.57 லட்சம் பங்குகளை 'ஆபர் பார் சேல்' முறையில் விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. ஐ.பி.ஓ., காலம் : மார்ச் 24 - 27 வரை விலை வரம்பு : ரூ.372 - 392 பட்டியலிடப்படும் தேதி : ஏப்ரல் 2, 2026 குறைந்தபட்ச முதலீடு : ரூ.14,896; ஒரு லாட் (38 பங்குகள்) முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு: நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவீதம், பெரிய முதலீட்டாளர்களுக்கு 15 சதவீதம், சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதம் நோக்கம்: ஆஸ்திரேலியாவின் 'நௌமெட் பார்மா' நிறுவனத்தை கைப்பற்றவும், நிறுவனத்தின் பழைய கடன்களை திருப்பிச் செலுத்துதல், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உருவாக்குதல் காரணங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். 'மணிப்பால் ஹாஸ்பிடல்ஸ்' 'ம ணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ்' இந்திய பங்கு சந்தையில், மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, மருத்துவ துறையில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு பெரிய வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டி.ஆர்.ஹெச்.பி., ஆவணத்தை வருகிற மார்ச் மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் மாதத்தில் செபியிடம் தாக்கல் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. எதிர்பார்க்கப்படும் ஐ.பி.ஓ., அளவு: ரூ.9,200 கோடி நிறுவனத்தின் மதிப்பு: ரூ.1.2 லட்சம் கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை