| ADDED : நவ 21, 2025 12:36 AM
சுதீப் பார்மா பங்கு
விலை ரூ.563 - -593
பு திய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'சுதீப் பார்மா' நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை, 563 - 593 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக, இந்நிறுவனம் 895 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. மருந்து, உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு இன்று துவங்கி, நவம்பர் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆரம்ப விலைக்கே
திரும்பிய ஸ்விக்கி
ஆ ன்லைன் உணவு வினியோக தளமான 'ஸ்விக்கி'யின் பங்கு விலை, அதன் உச்ச விலையான 617 ரூபாயில் இருந்து, கிட்டத்தட்ட 36 சதவீதம் சரிந்து, மீண்டும் அதன் ஐ.பி.ஓ., விலையிலேயே வர்த்தகமாகியது. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஸ்விக்கி நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளது, முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதிநிலைமைகள் மற்றும் போட்டி நிறுவனங்கள் அதிகரிப்பும், பங்குகளின் விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர நஷ்டம் 1,092 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.