உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

ராஜ்மார்க் இன்ப்ரா இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் இ ந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, சாலை திட்டங்களுக்காக ஐ.பி.ஓ., வாயிலாக 6,000 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஏலம் இன்று நடைபெறும் என்றும், இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வில் வரும் மார்ச் 11ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 99 முதல் 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'இன்னோவிஷன்' 'சு ங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் 'இன்னோவிஷன்' நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் வாயிலாக 323 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவன பங்குகளை ஐ.பி.ஓ.,வில் வாங்க, இன்று முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 521 முதல் 548 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் நிதியில், 51 கோடி ரூபாய் கடன் அடைக்கவும், 119 கோடி ரூபாய் நிறுவனத்தின் செயல்பாட்டு தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை