உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

'கென்ட் ஆர்.ஓ., சிஸ்டம்ஸ்' புதிய பங்கு வெளியீடு ஒத்திவைப்பு உ டனடியாக நிதி தேவை இல்லாததால், சந்தை சீரடையும் வரை அடுத்த ஓராண்டிற்கு ஐ.பி.ஓ., கொண்டு வரும் அவசரமில்லை என்பதை காரணம் காட்டி, 'கென்ட் ஆர்.ஓ., சிஸ்டம்ஸ்' நிறுவனம், தனது ஐ.பி.ஓ., திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. இதே போர் சூழலால் 'போன்பே மற்றும் ரிலையன்ஸ் ஜியோ' ஆகிய நிறுவனங்களும் தங்களின் ஐ.பி.ஓ., திட்டங்களை ஒத்திவைத்துள்ளன. ரூ.138.87 கோடி திரட்டும் 'ஹெக்ஸகன் நியூட்ரிஷன்' 'ஹெ க்ஸகன் நியூட்ரிஷன்' நிறுவனம், தனது ஐ.பி.ஓ., வெளியீட்டிற்கான விலை வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. இதில், நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் தங்களிடம் உள்ள 3.08 கோடி பங்குகளை மட்டும் விற்கின்றனர். விலை வரம்பு ரூ.42 - 45 வரை ஆரம்ப தேதி ஜூன் 5, 2026 முடியும் தேதி ஜூன் 9, 2026 ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் ஜூன் 4, 2026 திரட்டப்படும் தொகை ரூ.138.87 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ