மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
01-Aug-2026
ஐ.பி.ஓ.,லலிதா ஜூவல்லரி சென்னையை தலைமையிடமாக கொண்ட 'லலிதா ஜூவல்லரி மார்ட்' பங்கு வெளியீடு வாயிலாக 1,700 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான ஐ.பி.ஓ.,வில் வரும் ஆகஸ்ட் 17 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 190 ரூபாய் முதல் 201 ரூபாஅய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளும், நிறுவனர் கிரண் குமார் ஜெயினின் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஆபர் பார் சேல் முறையிலும் விற்பனைக்கு வருகின்றன. ஐ.பி.ஓ.,வில் சிறு முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
01-Aug-2026