உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., 38 நிறுவனங்கள் விண்ணப்பம்

 ஐ.பி.ஓ., 38 நிறுவனங்கள் விண்ணப்பம்

38 நிறுவனங்கள் விண்ணப்பம்

மேற்காசிய நாடுகளில் போர் நீடிக்கும் நிலையிலும், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 38 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிடுவதற்கான வரைவு ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளன. இதுவே, முந்தைய 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 22 நிறுவனங்களும், 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 16 நிறுவனங்களும் விண்ணப்பித்திருந்தது செபியின் தரவுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 'எஸ்.பி.ஐ., பண்டு மேனேஜ்மென்ட், மணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ்' போன்றவை செபியிடம் விண்ணப்பித்துள்ளன. விரைவில் 'என்.எஸ்.இ., மற்றும் ஜியோவும்' களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் போர் பதற்றங்கள் மற்றும் வரி கொள்கைகளால் சந்தை ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களின் லாபமும் சிறப்பாக இருப்பதால், பங்குகளை வெளியிட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக நிபுணர் கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !