எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு ஐ.பி.ஓ., காலக்கெடு நீட்டிப்பு
செபியின் வழிகாட்டுதலின்படி, என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., ஆகிய இரு பங்குச்சந்தைகளும் எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சந்தையில் நிலவும் கடும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் புதிய பங்கு வெளியீட்டை தள்ளி வைத்திருந்தன. கால அவகாசம் நீட்டிப்பால், ஏப்ரல் 1, 2026 முதல் செப்டம்பர் 30, 2026க்குள் காலாவதியாகும் ஐ.பி.ஓ., அனுமதி கடிதங்கள், இப்போது செப்டம்பர் 30, 2026 வரை செல்லுபடியாகும். இதனால், அந்த நிறுவனங்களுக்கு இந்த ஒருமுறை வழங்கப்படும் சலுகை பெரும் உதவியாக இருக்கும்.