மேலும் செய்திகள்
சந்தை துளிகள்
03-Dec-2025
தனியார் சொத்து மேலாண்மை நிறுவன மான 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி' பங்குகள், நேற்று 20 சதவீதம் உயர்வுடன் பட்டியலானது. புதிய பங்கு வெளியீட்டில் பங்கு ஒன்றின் விலை 2,165 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பி.எஸ்.இ.,யில் 2,606.20 ரூபாய்க்கும், என்.எஸ்.இ.,யில் 2,600 ரூபாய்க்கும் பட்டியலானது. வர்த்தக நேரத்தின் போது, 23 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது. பின்னர், பட்டியலான விலையில் இருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்து முடிந்தது. நேற்றைய உயர்வால் இந்நிறுவன சந்தை மதிப்பு 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அதிக சந்தை மதிப்பு கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஹெச்.டி.எப்.சி., - ஏ.எம்.சி.,யை, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி., முந்தியுள்ளது. டிராவல்ஸ்டாக் டெக்.. புதிய பங்கு வருகிறது
டி ல்லியை தலைமையிடமாக கொண்டு, அலுவல் சார்ந்த பயணங்களுக்கான அறை முதல் விமான டிக்கெட் புக்கிங் வரை, பல்வேறு சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமான 'டிராவல்ஸ்டாக் டெக்', 250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களின் 26.85 கோடி பங்குகளுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதில், 135 கோடி ரூபாயை நிறுவனத்தின் மூலதன செலவுகளுக்கும், 45 கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளது.
03-Dec-2025