மீண்டும் 26,000 நோக்கி மெதுவாக பயணிக்கலாம்
குறியீடு நிப்டி-ஆரம்பம்- 25,423.60 , அதிகம் -25,697.00, குறைவு- 25,372.70, நிறைவு- 25,682.75ஏற்றத்தில் ஆரம்பித்து, சிறிது நேரத்தில் 30 புள்ளிகள் அளவிலான இறக்கத்தை சந்தித்து, பின்னர் மீண்டும் ஏற ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 211 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி100 குறியீடு அதிகபட்சமாக 0.85 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 ஏற்றத்துடனும்; 5 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி மீடியா குறியீடு, அதிகபட்சமாக 0.87 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,264 பங்குகளில், 1,341 ஏற்றத்துடனும்; 1,826 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) அருகே கன்சாலிடேஷன் நடந்து கொண்டிருக்கிறது. டெக்னிக்கலாக ஏற்றத்திற்கு தயாராவதைப் போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. 25,750-ல் நல்லதொரு ரெசிஸ்டென்சும், 25,500-ல் நல்லதொரு சப்போர்ட்டும் தற்போதைக்கு இருக்கிறது. 25,750-க்கு மேலே சென்றால், 26,000 நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது.