லாங்க் ஷார்ட் ஏ.ஐ.எப்., - எஸ்.ஐ.எப்., எது சிறப்பான மாற்று திட்டம்?
அதிக முதலீட்டு திறன் கொண்ட ஹெச்.என்.ஐ., முதலீட்டாளர்கள், 'லாங் - ஷார்ட் ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' பிரிவில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது எஸ்.ஐ.எப்., எனும் 'ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் பண்டு' பிரிவு அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்து, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்ததாவது: லாங் - ஷார்ட் ஏ.ஐ.எப்.,: இந்த வகை பண்டுகளை ரேஸ் கார் ஓட்டுவதுடன் ஒப்பிடலாம். அதாவது, சந்தை ஏற்ற இறக்கங்களில், 'லீவரேஜ், ஷார்ட் செல்லிங்' போன்ற முறைகளில் அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யப்படுகிறது. எனவே, அதிக லாபம் ஈட்டவும் வாய்ப்பிருக்கிறது. இதில் கிடைக்கும் லாபத்திற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.ஐ,எப்.,: இதில், முதலீடு செய்வது என்பது பைக்கில் செல்வது போலத்தான். இதில், முன்பேர வர்த்தகத்தில் செய்யப்படும் முதலீடு 25 சதவீதம் மட்டுமே. அதுவும், சந்தை இறக்கங்களில் பாதுகாப்பு கேடயம் போல செயல்படும். இதுதவிர, ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளை போன்ற வரி அமைப்பை கொண்டதால், செலுத்த வேண்டிய வரியும் (வரிச்சட்டம் 10(23டி) குறைவுதான். கடுமையான லாபத்தை எதிர்பார்க்கும் அதிக முதலீட்டு திறன் கொண்ட ஹெச்.என்.ஐ.,களுக்கு லாங் - ஷார்ட் ஏ.ஐ.எப்., இப்போது முதன்மையான தேர்வாக இருந்தாலும், தங்களின் ஈக்விட்டி போர்ட்போலியோவை திறம்பட பாதுகாக்கவும், வரிக்கு பிந்தைய லாபத்தை மேம்படுத்தவும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, எஸ்.ஐ.எப்., ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. எனவே, எஸ்.ஐ.எப்., திட்டங்கள் தரும் அதே நிகர லாபத்தை பெற, லாங் - ஷார்ட் ஏ.ஐ.எப்.,கள் அதைவிட மிகவேகமாக செயல்பட வேண்டியிருக்கும். எனவே, லாங் - ஷார்ட் உத்திகள் என்பது சந்தை ஏற்றத்தின்போதோ அல்லது நிலையாக இருக்கும்போதோ சிறப்பாக செயல்படாது; சந்தை அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்போது தான், நல்ல வருவாயை ஈட்ட பயன்படும்.