உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

பங்குகளை திரும்ப பெரும் 'விப்ரோ'

'வி ப்ரோ' நிறுவனம், முதலீட்டாளர்களிடமிருந்து 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற உள்ளது. ஒரு பங்கின் விலை 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டம், ஜூன் 11ல் துவங்கி ஜூன் 17ல் நிறைவடைகிறது. இதற்கான 'ரிக்கார்டு தேதி' ஜூன் 5 ஆகும். சிறு முதலீட்டாளர்கள், தங்களிடம் உள்ள ஒவ்வொரு 56 பங்குகளுக்கு 11 பங்குகள் வீதம் திருப்பி தரலாம் எனவும், பொதுப் பிரிவு முதலீட்டாளர்கள், தங்களிடம் உள்ள ஒவ்வொரு 197 பங்குகளுக்கு 10 பங்குகள் வீதம் திருப்பி தரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலர் - ரூபாய் மாற்றும் வசதி அறிமுகம்

இ ந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, வங்கிகளுக்கான புதிய டாலர் ரூபாய் 'ஸ்வாப்' வசதியை ஆர்.பி.ஐ., அறிமுகப்படுத்தி உள்ளது. முக்கிய அம்சங்கள் * வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை மற்றும் நிறுவனங்களின் வெளிநாட்டு கடன்கள் ஆகிய இரண்டிற்கும் தனித்தனியே இந்த வசதி கிடைக்கும் * 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான புதிய டாலர் டிபாசிட்களை தற்போதைய மாற்று விகிதத்திலேயே ரூபாயாக மாற்றி, முதிர்வின் போது அதே விகிதத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி செப்டம்பர் 30, 2026 வரை திறந்திருக்கும். Gallery

ரூ.300 கோடி கடன் பத்திரங்கள் 'எடெல்வைஸ்' அறிமுகம்

'எ டெல்வைஸ்' நிறுவனம், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாதுகாப்பான கடன் பத்திரங்களை விற்பனை செய்ய துவங்கியுள்ளது. ஜூன் 8ல் துவங்கிய இந்த விற்பனை ஜூன் 19 வரை நடைபெறும். முக்கிய விபரங்கள் * முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.64 முதல் 10 சதவீதம் வரை வட்டி * 24, 36, 60 மற்றும் 120 மாதங்கள் என 4 வெவ்வேறு கால அளவுகளில், 10 வகைகளான பத்திரங்கள் * தேவைக்கேற்ப மாதந்தோறும், ஆண்டுதோறும் அல்லது முதிர்வு காலத்தில் மொத்தமாக வட்டி பெறும் வசதி * ஒரு பத்திரத்தின் முகமதிப்பு 1,000 ரூபாய்; டிமேட் வடிவில் மட்டுமே வழங்கப்படும் * பணமாக்கி கொள்ளும் வசதியுடன் இவை 'பி.எஸ்.இ.,யில்' பட்டியலிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை