புதிய வருவாய் வாய்ப்புள்ள ஹெச்.டி.எப்.சி.,- ஏ.எம்.சி.,
கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'ஹெச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டுகளின் முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றா ன இதன் முக்கிய வரு வாய், பி.எம்.எஸ்., ஏ.ஐ.எப்., மற்றும் முதலீட்டு ஆலோசனை வாயிலாக நிர்வகிக்கப்படும் சொத்துகளுக்கு வசூலிக்கப்படும் மேலாண்மை கட்டணங்களிலிருந்து கிடைக்கிறது. ஏற்கனவே, வலுவான முதலீட்டு தளம், வினியோக அமைப்பு மற்றும் ஆராய்ச்சி வசதிகள் இருப்பதால், கூடுதல் முதலீடுகள் வாயிலாக செலவுகள் அதிகம் அதிகரிக்காமல், வருவாயை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2023 ஜூலை 1ல், ஹெச்.டி.எப்.சி., லிமிடெட், ஹெச்.டி.எப்.சி., வங்கியுடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, ஹெச்.டி.எப்.சி., வங்கி இதன் தாய் நிறுவனமாக உள்ளது. இருப்பினும், ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., பங்கு சந்தையில் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது. வாடிக்கையாளர்களை வழங்குவதுடன், வினியோக வலையமைப்பு வாயிலாக ஹெச்.டி.எப்.சி., வங்கி இதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வணிக கட்டமைப்பு
நடப்பு 2026 ஜூன் 30 நிலவரப்படி, ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி.,யின் இறுதி சொத்து மதிப்பு 9.32 லட்சம் கோடி ரூபாயாகவும், காலாண்டு சராசரி சொத்து மதிப்பு 9.35 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதில், பங்கு சார்ந்த சொத்துகள் 6.15 லட்சம் கோடி ரூபாயாகவும், தீவிரமாக நிர்வகிக்கப்படும் பங்கு முதலீடுகள் 5.74 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன. நிறுவனத்தின் பங்கு சார்ந்த சொத்துகளின் பங்கு 65.70 சதவீதமாக உள்ளது; ஒட்டுமொத்த துறையில் இது, 56.60 சதவீதமாக உள்ளது. மொத்த சொத்துகளில் பங்கு சார்ந்த முதலீடுகள் 68 சதவீதம், கடன் பத்திரங்கள் 17 சதவீதம், லிக்விட் நிதிகள் 8 சதவீதம் மற்றும் இதர திட்டங்கள் 7 சதவீதமாக இருந்தன. இதுதவிர, இ.பி.எப்.ஓ., மற்றும் மாநில பி.எப்., அமைப்புகளின் பிக்சட்-இன்கம் மேலாண்மை ஒப்பந்தங்களையும் நிறுவனம் பெற்றுள்ளது. தனித்துவ மேலாதிக்கம்
வலுவான பிராண்டு மதிப்பு, பரந்த வினியோக அமைப்பு, முதலீட்டு திறன் மற்றும் சில்லரைமுதலீட்டாளர்களின் ஆதரவு ஆகியவை ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி.,யின் முக்கிய போட்டி பலங்களாக உள்ளன. 2026 ஜூன் நிலவரப்படி, நிறுவனத்துக்கு 1.71 கோடி தனித்துவ முதலீட்டாளர்கள்; 3.11 கோடி செயல்பாட்டிலுள்ள கணக்குகள்; 280 அலுவலகங்கள் மற்றும் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் உள்ளனர். இந்தியாவின் 98 சதவீத அஞ்சல் குறியீட்டு பகுதிகளை நிறுவனம் சென்றடைந்துள்ளது. 280 அலுவலகங்களில், 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில், 196 அலுவலகங்கள் உள்ளன. மொத்த சொத்து மதிப்பில் நேரடி முதலீட் டு வழிகள் 44.50 சதவீதம், தேசிய வினியோகஸ்தர்கள் 22.60 சதவீதம், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்கள் 23.30 சதவீதம், வங்கிகள் 9.60 சதவீதம் மற்றும் ஹெச்.டி.எப்.சி., வங்கி 5.10 சதவீதம் பங்களிக்கின்றன. பங்கு சார்ந்த சொத்துகளில் நேரடி வழிகள் 31.40 சதவீதம் பங்களிக்கின்றன. மியூச்சுவல் பண் டு துறையில் நிறுவனத்தின் அளவு லாபத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. சந்தை ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும் விதிமுறை செலவுகள் பெரும்பாலும் நிலையாக இருப்பதால், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கும்போது வருவாய் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, குறைந்த கட்டண வருவாய் தரும் லிக்விடு மற்றும் கடன் திட்டங்களைவிட அதிக கட்டண வருவாய் தரும் பங்கு சார்ந்த சொத்துகளில் அதிக கவனம் செலுத்துவது சாதகமாக உள்ளது. வளர்ச்சி உந்துசக்திகள்
கடந்த 2022ம் நிதியாண்டில் 2,115 கோடி ரூபாயாக இருந்த செயல்பா ட் டு வருவாய், 2026ம் நிதியாண்டில் 4,119 கோடி ரூபாயாக உயர்ந்து, 18 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்தது. இதே காலத்தில், நிகர லாபம் 1,393 கோடி ரூபாயில் இருந்து 2,859 கோடி ரூபாயாக உயர்ந்து, 19 சதவீத வளர்ச்சி கண்டது. கடந்த நிதியாண்டில் செயல்பாட்டு லாபம் 3,211 கோடி ரூபாயாகவும், பங்குதாரர் மூலதனத்தின் மீதான வருவாய் 32.90 சதவீதமாகவு ம் இருந்தது. 2022ம் நிதியாண்டில் 4.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இறுதி ஏ.யு.எம்., 2026ம் நிதியாண்டில் 8.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. தனித்துவ முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் 58 லட்சத்திலிருந்து 1.67 கோடியாக அதிகரித்தது. சென்ற ஜூன் மாதத்தில் எஸ்.ஐபி., பரிவர்த்தனைகளின் மதிப்பு 4,810 கோடி ரூபாயாக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தைவிட 20 சதவீதம் அதிகமாகும். மாற்று முதலீடுகள் மற்றும் சர்வதேச சொத்து மேலாண்மை துறைகளிலு ம் நிறுவனம் விரிவடைந்துள்ளது. 2022ல் மாற்று முதலீட்டு பிரிவில் நுழைந்ததுடன், கிப்ட் சிட்டியில் ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., இன்டர்நேஷனல் நிறுவனத்தை உருவாக்கியது. தனியார் கடன் மற்றும் துணிகர முதலீடு/தனியார் பங்கு முதலீட்டு பிரிவுகளிலும் விரிவாக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாய்ப்புகளும் சவால்களும்
இந்திய குடும்பங்களின் சேமிப்பு நிதி சந்தைகளை நோக்கி திரும்புவதும், மியூச்சுவல் பண்டு மற்றும் எஸ்.ஐ.பி., முதலீடுகள் அதிகரிப்பதும், ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி.,க்கு சாதகமான வாய்ப்புகளாக உள்ளன. குறிப்பாக, பங்கு சார்ந்த முதலீடுகளின் வளர்ச்சி முக்கிய உந்துசக்தியாக தொடர்கிறது. பி.எம்.எஸ்., ஏ.ஐ.எப்., பிரைவேட் கிரெடிட் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் வாயிலாக மியூச்சுவல் பண்டு வணிகத்துக்கு அப்பாலும் புதிய வருவாய் வாய்ப்புகள் உருவாகின்றன. அதேவேளையில், பங்கு சந்தையில் நீண்டகால சரிவு ஏற்பட்டால் நி றுவனத்தின் ஏ.யு.எம்., மற்றும் வருவாய் பாதிக்கப்படலாம். கட்டண குறைப்பு, சந்தை போட்டி, வினியோக நடைமுறை மாற்றங்கள், புதிய விதிமுறைகள் மற்றும் குறைந்த கட்டண பேசிவ் பண்டுகளுக்கான அதிகரிக்கும் ஆர்வம் ஆகியவை சவால்களாக உள்ளன. மாற்று முதலீட்டு பிரிவு இன்னும் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் இருப்பதால், அதனை விரிவுபடுத்துவதிலும் சவால்கள் உள்ளன. டிஜிட் டல் மயமாக்கல் அதிகரிப்பதால் இணை ய பாதுகாப்பு அபாயங்களும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. 2026 மே மாதத்தில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக நிறுவனம் தெரிவித்திருந்தாலும், அது வணிகத்தையோ 2027ம் நிதியாண்டின் முதல் காலாண்டு லாபத்தையோ பாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது. பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.