என்.எப்.ஓ.,
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு கால அவகாசம் நீட்டிப்பு 'எ ஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' நிறுவனம், தனது எஸ்.பி.ஐ., நிப்டி மிட்கேப் 150 மொமென்டம் 50 இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், பிப்., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்கான அவகாசம் பிப்., 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000 நோக்கம்: 'மிட்கேப் மொமென்டம் இன்டெக்ஸில்' உள்ள பங்குகளின் செயல்திறனை பின்தொடர்ந்து, நீண்டகால அடிப்படையில் லாபத்தை ஈட்டுவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இலக்கு கண்டிப்பாக அடையப்படும் என்ற உத்தரவாதம் இல்லை.