உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி

 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி

'ரோடெக் பார்மா, ரென்னி ஸ்ட்ரிப்ஸ், கிருஷ்ணா பில்டுஸ்பேஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்ட செபி அனுமதி வழங்கியுள்ளது. ரோடெக் பார்மா: கால்நடை மருந்துகள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் இந்நிறுவனம், 56.50 லட்சம் பங்குகளை ஓ.எப்.எஸ்., முறையில் வெளியிட உள்ளது. ரென்னி ஸ்ட்ரிப்ஸ்: இரும்பு சார்ந்த கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், பங்குதாரர்களின் 1.20 கோடி பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணா பில்டுஸ்பேஸ்: குஜராத்தை சேர்ந்த இந்த கட்டுமான நிறுவனம், 90 லட்சம் புதிய பங்குகளையும், 9 லட்சம் பங்குதாரர்களின் பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !