உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பங்குச்சந்தை விதிகள் மசோதா பார்லி.,யில் தாக்கலானது

 பங்குச்சந்தை விதிகள் மசோதா பார்லி.,யில் தாக்கலானது

முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பங்குச்சந்தை விதிகள் மசோதா 2025ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். பின்னர், பார்லி., நிலைக்குழு பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மசோதாவின் முக்கிய அம்சங்கள்: * தற்போது நடைமுறையில் உள்ள செபி சட்டம் 1992, டெபாசிட்டரிகள் சட்டம் 1996 மற்றும் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1956) ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது * முதலீட்டாளர்களின் குறைகளை தீர்க்க 'குறைதீர்ப்பாளர்' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, புகார்களுக்கு காலக்கெடுவுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது * நிதிச்சந்தையில் தேவையற்ற விதிமுறைகளை குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றவும் உதவும். * புதிய நிதி திட்டங்கள் மற்றும் சேவைகளை சோதித்துப் பார்க்க 'ரெகுலேட்டரி சாண்டோபாக்ஸ்' எனப்படும் சோதனை முறையை செபி உருவாக்க இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ