டி.சி.எஸ்., சந்தை மதிப்பு கடும் சரிவு
மும்பை:மெரிக்காவின் 'எச்1பி'விசா கட்டணம் உயர்வு உட்பட பல்வேறு சவால்கள் காரணமாக, இந்தாண்டு மட்டும் டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.40 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும், டி.சி.எஸ்., பங்குகள் 28 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. கடந்த செப்.21 முதல் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 7 நாட்களில் மட்டும் நிப்டி ஐ.டி., குறியீடு 7.4 சதவீதம் சரிவை கண்டுள்ளது.