உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ் : 24,150 வலிமையான சப்போர்ட்டாக உருவெடுக்கிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 24,150 வலிமையான சப்போர்ட்டாக உருவெடுக்கிறது

நிப்டி இறக்கத்தில் ஆரம்பித்து உடனடியாக ஏற்றம் கண்டு பின்னர் நாள் முழுவதும் தொடர் ஏற்றத்துடன் நடைபெற்ற நிப்டி நாளின் இறுதியில் 156 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி100 குறியீடு குறைந்தபட்சமாக 0.79 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு அதிகபட்சமாக 1.64 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும் ஒரு குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு 0.02 சதவீத இறக்கத்துடனும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 2.65 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Galleryவர்த்தகம் நடந்த 3,350 பங்குகளில் 2,363 ஏற்றத்துடனும் 891 இறக்கத்துடனும், 96 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி குறுகிய கால சராசரிகளுக்கு மேலே நிறைவடைந்துள்ளபடியால் குறுகிய கால புல்லிஷ் மொமெண்டம் உருவாகியுள்ளது எனலாம். ஆர்எஸ்ஐ மற்றும் எம்ஏசிடி ஏற்றம் தொடர்வதற்கு ஆதரவான சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது. ஸ்டொக்காஸ்ட்டிக் சற்று ஓவர்பாட்டாக இருப்பதால் மட்டுமே 24,550 லெவல்தனை கடக்க சிரமப்படலாம் என்று டெக்னிக்கலாக கூறவேண்டியுள்ளது. தற்போதைய சூழலில் 24,150க்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ