உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,225-ஐ தாண்டினால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

 டெக்னிக்கல் அனாலிசிஸ்: 24,225-ஐ தாண்டினால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

கணிசமான ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 873 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு, குறைந்த பட்சமாக 3.71 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 4.62 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.52 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 6.75 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Gallery வர்த்தகம் நடந்த 3,369 பங்குகளில், 2,960 ஏற்றத்துடனும்; 341 இறக்கத்துடனும்; 68 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி கண்டுள்ள வேகமான ஏற்றம், டெக்னிக்கலாக குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நீண்ட கால அடிப்படையிலான டிரெண்ட் இன்னமும் சற்று பலவீனமாகவே உள்ளது. 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு(இ.எம்.ஏ.,) மேல் ஒரே பாய்ச்சலில் சென்றுள்ள நிப்டி, 50 நாள் சராசரிக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. மொமென்டம் சீராக இருந்தாலும்கூட, கணிமான அளவில் திடீர் ஏற்றம் கண்டுள்ளதால் ஒரு சிறிய இறக்கமோ அல்லது கன்சாலிடேஷனோ நடப்பதற்கான வாய்ப்புள்ளது. தற்போதைக்கு திடமானதொரு ரெசிஸ்டென்ஸ் 24,225-ல் இருக்கிறது. 24,225-க்கு மேலே சென்றால் 24,850-ஐ நோக்கிய பயணம் நடைபெற வாய்ப்புள்ளது. 24,225-ஐ தாண்ட முடியாவிட்டால், டெக்னிக்கலாக மீண்டும் கீழே 23,500 வரை சென்று திரும்பவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ