உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  டிரெண்டு மாற 24,500-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்

 டிரெண்டு மாற 24,500-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்

கணிசமான ஏற்றத்துடன் ஆரம்பித்து, அதில் கிட்டத்தட்ட பாதி அளவினை இழந்து, பின்னர் இழந்த புள்ளிகளை மீட்டெடுத்து, நாளின் இறுதியில் 233 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்தபட்சமாக 1.06 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிக பட்சமாக 2.39 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு, அதிகபட்சமாக 3.10 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.46 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,304 பங்குகளில், 2,544 ஏற்றத்துடனும்; 673 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 24,500--25,000 லெவலுக்கு கீழே இருக்கும் வரை, நிப்டி பியரிஷாக இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். உடனடி சப்போர்ட்டாக 24,200- புள்ளியை நிப்டி கொண்டிருக்கிறது. இதற்கு கீழே சென்றால், 23,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடர்ந்தாலும்கூட, 24,500 என்ற லெவலை கடக்க ரொம்பவுமே சிரமப்பட வேண்டியிருக்கும். செய்திகள் மிகவும் சாதகமாக இருந்தால் மட்டுமே, நிப்டியால் 24,500-ஐ தாண்ட முடியும். ஆதரவு 24,115 23,985 23,900 தடுப்பு 24,340 24,420 24,510 நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) ஹெச்.டி.எப்.சி., பேங்க் 849.00 8.30 எட்டர்னல் 226.70 -2.86 டாடா ஸ்டீல் 195.34 4.33 ஜியோ பைனான்சியல் சர்விசஸ் 236.65 4.40 கோட்டக் மஹிந்திரா பேங்க் 391.25 4.90 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 19.96 0.31 சுஸ்லான் எனர்ஜி 41.53 1.91 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 67.45 0.69 அசோக்லேலண்ட் 194.00 7.06 என்.எம்.டி.சி., 79.81 0.68 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) ரெடிங்டன் 257.40 25.05 பி.ஜி., எலெக்ட்ரோ பிளாஸ்ட் 552.00 29.65 ஐநாக்ஸ் விண்டு 83.15 1.41 பந்தன் பேங்க் 182.79 8.67 என்.பி.சி.சி., இந்தியா 87.20 2.76 மற்ற சில பங்குகளின் விலை விவரம் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 258.80 3.40 கோதாவரி பவர் 254.45 5.75 தி கர்நாடகா பேங்க் 220.10 14.29 டாடா பவர் 380.55 7.65 யூனியன் பேங்க் 186.99 7.93


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ