உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ. 9,950 கோடிக்கு ஐ.பி.ஓ., ஹெக்ஸாவேர் விண்ணப்பம்

ரூ. 9,950 கோடிக்கு ஐ.பி.ஓ., ஹெக்ஸாவேர் விண்ணப்பம்

மும்பை:டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனமான, 'ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்', புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 9,950 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹெக்ஸாவேர் நிறுவனம், தனியார் பங்கு நிறுவனமான 'கார்லைல்' குழுமத்தின் ஆதரவுடன் புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை செபியில் தாக்கல் செய்துள்ளது. ஹெக்ஸாவேர் நிறுவனத்தில், கார்லைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'சி.ஏ.,மேக்னம் ஹோல்டிங்ஸ்' 95 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.ஹெக்ஸாவேர் டெக்னாலஜி நிறுவனம் நிதி சேவை, சுகாதாரம், காப்பீடு, உற்பத்தி மற்றும் நுகர்வோர், உயர் தொழில்நுட்பம், தொழில்முறை சேவை, வங்கி, பயணம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா - பசிபிக் குறிப்பாக இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இச்சேவையை வழங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை