மேலும் செய்திகள்
வேகம் எடுக்காத கார் விற்பனை
03-Sep-2024
சென்னை:ஆகஸ்ட் மாத இருசக்கர வாகன விற்பனை, 8.97 சதவீதம் உயர்ந்ததாக வாகன தயாரிப்பு நிறுவனங்களின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 13.98 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆகஸ்ட்டில் 15.23 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதிலும், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் போட்டி தொடர்ந்து வருகிறது. இம்முறை, வெறும் 585 வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்து உள்நாட்டு விற்பனையில் ஹீரோ முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனால், ஏற்றுமதி உட்பட மொத்த விற்பனையில், 5.38 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து ஹோண்டா முதல் இடத்தை பிடித்துள்ளது. என்பீல்டை தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக, பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை, 29.72 சதவீதம் உயர்ந்துள்ளது. என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை, 5.10 சதவீதம் குறைந்துள்ளது.
ஹீரோ 4,72,947 4,92,263 4.08 ஹோண்டா 4,51,200 4,91,678 8.97டி.வி.எஸ்., 1,53,04 1,70,486 11.39பஜாஜ் 160,820 2,08,621 29.72சுசூகி 83,045 87,480 5.34என்பீல்டு 77,583 73,630 (-)5.10மொத்தம் 13,98,642 15,24,158 8.97
03-Sep-2024