வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தாங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அருமையாக இருந்தது.
அன்னிய முதலீட்டாளர்கள், நடப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் மட்டும், இந்திய பங்குகளில் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஜூன் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்களின் மொத்த முதலீடுகளில், நுகர்வோர் பொருட்கள், சேவைகள், தொலைதொடர்பு உள்ளிட்ட நுகர்வு சார்ந்த துறைகளின் பங்கு, 25.50 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியது சில்லரை விலை பணவீக்கம் கடந்த மாதம் சற்றே அதிகரித்து, 3.65 சதவீதமாக இருந்தது. பழங்கள், காய்கறிகளில் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டது. நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த ஜூலையில் 4.80 சதவீதமாக இருந்தது பொருளாதார மந்தநிலை மற்றும் தேவை குறைபாடு குறித்த கவலையால், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும்பட்சத்தில், அது இந்திய பங்கு சந்தைகளுக்கு கவலை அளிக்கும் விஷயம் என, 'மார்கன் ஸ்டான்லி' நிறுவனம் தெரிவித்துள்ளது கடந்த மாதம் எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 23,547 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஆகஸ்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 38,239 கோடி ரூபாயாக இருந்தது கடந்த மாதம் காப்பீடு நிறுவனங்களின் பிரீமியம் வசூல், 22 சதவீதம் அதிகரித்து, 32,644 கோடி ரூபாயாக இருந்தது. குறிப்பாக எல்.ஐ.சி., நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 13 சதவீதம் உயர்ந்து, 4,936 கோடி ரூபாயாக இருந்தது. வரும் வாரம்
மொத்தவிலை பண வீக்கம், ஏற்றுமதி - இறக்குமதி நிகர நிலவரம், எம் - 3 பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி மற்றும் வங்கிகளில் உள்ள வைப்புநிதியின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன சில்லரை வர்த்தக நிலவரம், தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, கட்டடங்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை, பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், வேலை இல்லாத நபர்களின் எண்ணிக்கை, வீடுகள் விற்பனை நிலவரம் போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று, 84 புள்ளி ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று, 104 புள்ளி ஏற்றத்துடனும்; புதனன்று, 122 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று, 470 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில், 32 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் - திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில், 504 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், உலக சந்தைகள் காணும் ஏற்ற இறக்கங்கள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே சந்தையின் குறுகிய கால செயல்பாட்டை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் 17, 18ம் தேதிகளில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, கவனம். டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், கடந்த வார இறுதியில் நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான சூழல் இருப்பதை போன்ற நிலைமை உருவாகியுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே, நிப்டியின் அடுத்த வார நகர்வுகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில், வர்த்தகர்கள் குறுகிய அளவிலான நஷ்டம் தவிர்க்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு மட்டுமே செயல்படும் அளவில், தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை வைத்துக்கொள்வதே சிறந்த நடைமுறையாக இருக்கும். நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24,929, 24,501 மற்றும் 24,241 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 25,609, 25,861 மற்றும் 26,121 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 25,181 என்ற அளவிற்கு கீழே போகாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
தாங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அருமையாக இருந்தது.