உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வருமான வரி தாக்கலுக்கு 15 நாள் கூடுதல் அவகாசம்

வருமான வரி தாக்கலுக்கு 15 நாள் கூடுதல் அவகாசம்

புதுடில்லி:கடந்த 2023 - 24ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வருகிற 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அதன் சுற்றிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2023 -24ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரித்துறை மேலும் 15 நாட்களுக்கு அதாவது, வருகிற 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் 92 இ பிரிவின் கீழ் அறிக்கைகளை சமர்ப்பிக்கக்கூடிய, வருமான வரி கணக்கு தாக்கலை வருகிற 15ம் தேதி வரைக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை