உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

புதுடில்லி: வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. வங்கி ஊழியர்களுக்கு, மாதத்தின் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் வார விடுமுறை. மீதமுள்ள இரண்டு சனிக்கிழமையும் விடுமுறை விடக்கோரி, ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் அமைப்பான யு.எப்.பி.யு., சார்பில், ஜன., 27 (இன்று) நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.சனிக்கிழமை விடுமுறையால் ஏற்படக்கூடிய பணி நேரத்தை, திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதலாக 40 நிமிடம் பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை அதை அறிவிக்காமல் உள்ளது. அரசுடன் நடத்தப்பட்ட விரிவான பேச்சிலும், எங்கள் கோரிக்கை மீது உறுதி அளிக்கப்படாததால், வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் வெங்கடாசலம் தெரிவித்தார். வேலைநிறுத்தத்தால் பொதுத்துறை வங்கிகளில் ரொக்க டிபாசிட், ரொக்கம் எடுத்தல், காசோலை கிளியரிங் பாதிக்கும் யு.பி.ஐ., பரிவர்த்தன, இணையவழி பேங்கிங் பாதிக்காது; சில இடங்களில் ஏ.டி.எம்., ரொக்கம் வழங்காத நிலை வரலாம் ஹெச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் பங்கேற்காததால், அவற்றின் சேவை பாதிக்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muralidharan S
ஜன 29, 2026 11:31

வேலை பளு மற்றும் மன அழுத்தம் அதிகம் நிறைந்த துறை வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை. குறிப்பிட்ட காலவரம்புக்குள் முடிக்க/அடைய வேண்டும் என்ற அடைய முடியாத இலக்கு நிர்ணயித்து அதன் அடிப்படையில் இயங்கும் துறைகள் இந்த இரண்டும்.. இந்த துறையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இதன் அடிப்படையில் மட்டும்தான் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. கூட்டாக வேலை பறிக்கப்படுவதுவும் இதன் அடிப்படையில்தான்.., விடுமுறை நாட்கள் என்று இருந்தாலும், இந்த துறைகளில் குறிப்பாக தனியார் வங்கிகளில், விடுமுறை நாட்களிலும் பணிக்கு வரவேண்டும் என்பது காகிதத்தில் எழுதப்படாத விதி.. அப்படி விடுமுறை நாட்களில் வந்து வேலை செய்யாதவர்கள் கட்டம் கட்டப்பட்டு பணிநீக்கம் போன்ற சமயங்களில் அவர்களது பெயர் லிஸ்டில் முதலில் இடம்பெறும். அதுவும் வங்கித்துறையில் - தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்பவர்களுக்கு இரண்டு மடங்கு அழுத்தம்.. குடும்பத்தில் அப்பா, அம்மா, மனைவி , குழந்தைகள் என்று யாருக்காவது, ஏன் அவருக்கே உடல் நிலை சரி இல்லை என்றாலும் அவ்வளவு எளிதாக விடுப்பு எடுக்க முடியாது. இதில் வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு திருப்பி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் பழி எல்லாம் அந்த கடனை சாங்க்ஷன் செய்தவர்கள் மீதுதான்.. ரெகவரி என்ற பெயரில் பெரும் அழுத்தம் கொடுக்கப்படும்.. இதர சேவைகள் என்ற பெயரில் இன்சூரன்ஸ், mutual fund, credit card போன்றவை விற்க டார்கெட்.. IT துறையில் project delivery deadlines, Go-Live pressure.. இவை எல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது.. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் சொகுசான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது போல இருந்தாலும், பல மடங்கு மனஅழுத்தம் இருப்பது இந்த துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்... இந்த இயங்கமுடியாத மனஅழுத்தம் பலபேரை இந்த துறைகளில் தற்கொலைக்கு தூண்டுகிறது. இந்த பணிகள் மிகவும் கடினமானது, பரிதாபமானது. வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்பது மிகவும் நியாயமான உடல் மற்றும் மனநல பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.. இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.. இதை போல அரசுத்துறைகள் - குறிப்பாக லஞ்சமும் வாங்காமல் இயங்கினால் நாடு என்றோ வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலில் இனைந்து இருக்கும்....


Kalyanaraman
ஜன 29, 2026 08:56

இப்போது 40 மணி நேரம் வேலை செய்ய ஒப்புக் கொள்கிறார்கள் சில வருடங்கள் கழித்து வேலை நேரம் அதிகம் என்று சொல்லி அதை குறைக்க பந்த் நடத்துவார்கள். கழுதை தெரிந்து கட்டெறும்பான கதை. இன்சூரன்ஸ் நிறுவனம் போல் நான்கு ஐந்து வங்கிகள் இருந்தால் போதும். மற்ற வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும். இதனால் சைபர் பாதுகாப்பு போன்றவை அத்தியாவசியங்களில் மேலும் வலிமையாக முடியும்.


Vasan
ஜன 29, 2026 04:20

Banks should be round the clock on all the days including Saturdays and Sundays.


sankar
ஜன 28, 2026 14:11

பேசாம ஒர்க் பிரம் ஹோம் - கேளுங்கப்பா


புதிய வீடியோ