ரூ.6,500 கோடியில் மின் நிலையம் பெல் - அதானி பவர் ஒப்பந்தம்
பொதுத்துறை நிறுவனமான பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், 800 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அனல்மின் நிலையங்களை அமைப்பதற்காக, அதானி பவர் நிறுவனத்திடம் இருந்து 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிறுவனத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்கி, ஆறு மின் நிலையங்களை அமைப்பதுடன், அதன் இயக்கத்தையும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் மேற்பார்வையிடும்.