உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  பணவீக்கம் கணக்கிடுவதில் மாற்றம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது

 பணவீக்கம் கணக்கிடுவதில் மாற்றம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது

புதுடில்லி: புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சில்லரை விலை பணவீக்க குறியீட்டில், உணவு பொருட்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, தற்போது சில்லரை விலை பணவீக்கம் கணக்கிடப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cc8rgwd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அடிப்படை ஆண்டை மாற்றியமைப்பதோடு, இந்திய குடும்பங்களின் நுகர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதிபலிக்கும் விதமாக, புதிய பணவீக்க குறியீட்டை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகள், தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பணவீக்கத்தை தீர்மானிப்பதில் உணவு மற்றும் பானங்களின் பங்கு தற்போது 45.86 சதவீதமாக உள்ள நிலையில், புதிய குறியீட்டில் இது 36.75 சதவீதமாகிறது. இந்திய குடும்பங்கள் உணவுக்காக செலவழிப்பது குறைந்துள்ள நிலையில், பணவீக்க கணக்கீட்டில் இதன் பங்கு அதிகமாக இருப்பது, தவறான நிலவரத்தை பிரதிபலிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருள்களில் அடிக்கடி திடீர் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது, ஒட்டுமொத்த பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2024ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய குறியீடு, வரும் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த மாதம் 12ம் தேதி வெளியிடப்படும் ஜனவரி மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்க தரவுகள், இதன் அடிப்படையிலேயே வெளியிடப்படும். பணவீக்க குறியீட்டில் தற்போது 299 பொருள்கள் உள்ளன; புதிய குறியீட்டில் 358 பொருள்கள் இடம்பெறும்.

எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை

புதிய குறியீட்டில், பணவீக்கம் பொதுவாக 20 - 30 சதவீத புள்ளிகள் வரை சற்றே உயரும். எனினும், உணவு பொருள்களின் விலை அதிகரிக்கும் மாதங்களில், பணவீக்கம் 20 - 30 சதவீத புள்ளிகள் குறைவாகவே பதிவாகும். முக்கிய பிரிவுகளின் பங்கு (%) பிரிவு தற்போது இனி உணவு, பானங்கள் 45.86 36.75 கல்வி சேவைகள் 4.46 3.33 பான் மசாலா, புகையிலை 2.38 2.99 சுகாதாரம் 5.89 6.10 தனிநபர் பராமரிப்பு, பிற பொருட்கள் மற்றும் சேவைகள் 3.89 5.04 விளையாட்டு, கலாசாரம் 1.68 4.86 போக்குவரத்து, தகவல் தொடர்பு 8.59 12.41


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ