உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / திருவண்ணாமலை டைடல் பார்க் கட்டுமான முயற்சிகள் துவக்கம்

திருவண்ணாமலை டைடல் பார்க் கட்டுமான முயற்சிகள் துவக்கம்

சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தில், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மினி டைடல் பார்க் கட்டடம் கட்ட, தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் கட்டடத்தால், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவானது. இந்த துறையின் வேலைவாய்ப்பை மாநிலம் முழுதும் பரவலாக்க இரண்டாம் நிலை நகரங்களில், 50,000 - 60,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டப்படுகிறது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில், 60,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் சர்வதேச தரத்தில், டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டைடல் பார்க் நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது. நான்கு மாதங்களுக்குள் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, இந்தாண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. டைடல் பார்க்கில் உள்ள அலுவலகங்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !