உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.1.85 லட்சம் கோடியாக உயர்வு

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ரூ.1.85 லட்சம் கோடியாக உயர்வு

புதுடில்லி:நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த மார்ச் மாதத்தில் 1.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில், வர்த்தகப் பற்றாக்குறை 1.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு அமைப்பு

புவிசார் அரசியல் சூழல் மற்றும் அமெரிக்காவுடனான பிற நாடுகளின் வர்த்தக உறவுகள் ஆகியவையே நடப்பு நிதியாண்டில், உலக வர்த்தக் சூழலை தீர்மானிக்கும் என மத்திய வர்த்தக துறை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால், நம் நாட்டில் பிற நாட்டு பொருட்கள் குவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகளின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாத நிலவரம்மார்ச் சரக்கு ஏற்றுமதி ரூ.3.61 லட்சம் கோடி 0.70% (உயர்வு)மார்ச் சரக்கு இறக்குமதி ரூ.5.46 லட்சம் கோடி 11.30% (உயர்வு)வர்த்தக பற்றாக்குறை ரூ.1.85 லட்சம் கோடிபிப்., 2025 வர்த்தக பற்றாக்குறை 1.21 லட்சம் கோடி2024 - 25 ஏற்றுமதி ரூ.70.60 லட்சம் கோடி 5.50% (உயர்வு)2024 - 25 இறக்குமதி ரூ.78.71 லட்சம் கோடி 6.80% (உயர்வு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !