உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்க 5 முக்கிய சட்டங்களில் இருந்து விலக்கு

புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்க 5 முக்கிய சட்டங்களில் இருந்து விலக்கு

புதுச்சேரி:புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்க 5 முக்கிய சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திய புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, கரசூரில் அமைத்துள்ள 750 ஏக்கர் பரப்பளவிலான தொழிற்பேட்டையில், பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனையேற்ற அரசு, புதுச்சேரியில் தொழில் துவங்குபவர்களுக்கு, புதுச்சேரி நகரமைப்பு குழுமம், கட்டட துணை விதிகள், நகராட்சி, கிராம கொம்யூன் பஞ்சாயத்து, நிலத்தடி நீர் ஒழுங் குமுறை ஆகிய சட் டங்களில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக ஒரு தொழில் துவங்க வேண்டுமெனில், அவர்கள் புதுச்சேரி நகரமைப்பு குழுமம், கட்டட துணை விதிகள், நகராட்சி, கிராம கொம்யூன் பஞ்சாயத்து, நிலத்தடி நீர் ஒழுங்குமுறை ஆகிய சட்டங்களின்படி, அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். அதன் அனுமதி கிடைத்த பிறகே தொழிற்சாலைகளை துவங்க முடியும். முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட 5 சட்டங்களில் இருந்து விலக்கு கொடுக்கப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு தொழிற்சாலைகளும் விண்ணப்பிக்கும் போது, 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து அனுமதி வழங்கபட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை