உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மாம்பாக்கம் தொழில் பூங்காவில் ரயில் கதவு தயாரிப்பு ஆலைக்கு நிலம்

மாம்பாக்கம் தொழில் பூங்காவில் ரயில் கதவு தயாரிப்பு ஆலைக்கு நிலம்

சென்னை:ஜெர்மனியின், 'நார் பிரெம்ஸ்' நிறுவனம் ஆலை அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகில், 'சிப்காட்' நிறுவனத்தின் மாம்பாக்கம் தொழில் பூங்காவில், 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக, அந்நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு அண்மையில் சென்றது. அப்போது, ஜெர்மனியின் நார் பிரெம்ஸ் நிறுவனம், காஞ்சிபுரத்தில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், ரயில்வே கதவு, பிரேக்கிங் அமைப்புகளுக்கான ஆலையை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனம் ஆலை அமைக்க தற்போது, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மாம்பாக்கம் தொழில் பூங்காவில், 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன ஆலையால், 3,500 வேலைவாய்ப்பு உருவாகும் என, அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ