உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய டிமேட் கணக்கு துவக்கம் நவம்பரில் வேகம் குறைந்தது

புதிய டிமேட் கணக்கு துவக்கம் நவம்பரில் வேகம் குறைந்தது

புதுடில்லி:இந்தியாவில் புதிய 'டிமேட்' கணக்குகள் துவங்கப்படும் வேகம் சற்றே குறைந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில், நவம்பர் மாதத்தில் துவங்கப்பட்ட புதிய டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 31.70 லட்சமாக சரிந்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் இது 33.40 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, பங்குச் சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், புதிய கணக்குகள் துவங்கப்படுவது சற்றே குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'செபி'யின் புதிய கட்டுப்பாடுகளால் முன்பேர வணிக சந்தையில் வர்த்தகம் குறைந்துள்ளதும், டிமேட் கணக்கு துவக்கம் குறைய காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த மாதத்துடன் சேர்த்து 18.21 கோடியாக உள்ளது. கடந்த அக்டோபரில் இது 17.89 கோடியாக இருந்தது. நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் துவங்கப்பட்ட புதிய டிமேட் கணக்குகளின் சராசரி, 39.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சந்தை சீறிப் பாய்ந்து வருவதால், வரும் மாதங்களில் புதிய டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி