உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆன்லைன் ஷாப்பிங்: மெட்ரோ நகரங்களை விஞ்சிய சண்டிகர்

ஆன்லைன் ஷாப்பிங்: மெட்ரோ நகரங்களை விஞ்சிய சண்டிகர்

புதுடில்லி, ஜூன் 8-நாட்டின் பெருநகரங்களான டில்லி, மும்பை, கொல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றைவிட, ஆன்லைன் ஷாப்பிங்கில், சண்டிகர் மக்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பது, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட ஆய்வறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.டில்லி என்.சி.ஆர்.,, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கான முக்கிய நகரமாக விளங்கும் சண்டிகரில், சிறந்த இணையதள இணைப்பு, அனைவரிடமும் ஸ்மார்ட்போன் ஆகியவை மட்டுமின்றி, தொழில்நுட்பம் அறிந்த மக்கள் அதிகரித்துள்ளனர்.ஆன்லைன் ஷாப்பிங் குறித்த தகவல் அறிவு, இருந்த இடத்தில் இருந்து பொருட்களை பெறும் வசதி, பொருட்கள் தேர்வுக்கு அதிக வாய்ப்புகள் ஆகியவற்றால், சண்டிகர் மக்களில் பத்தில் ஏழு பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்றனர். பெரும்பாலான வணிக நிறுவனங்களின் ஆன்லைன் டெலிவரி வசதி, நவீன சில்லறை வணிக கையாளல் ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை விட, ஆன்லைன் ஷாப்பிங்கில் சண்டிகர் முன்னிலை வகிக்கிறது.

முன்னணி மாநிலம்/யூனியன் பிரதேசம்

சண்டிகர் 68.70%கோவா 51.60%தாத்ராநகர் ஹவேலி 50.60%டில்லி 48.80%பின்தங்கிய மாநிலம்/யூனியன் பிரதேசம்ஒடிஷா 16.20%திரிபுரா 16.00%ராஜஸ்தான் 14.30%சத்தீஸ்கர் 9.50%லடாக் 7.30%நகர/கிராம பங்களிப்புஇந்திய சராசரி 24.50%கிராமப்புறம் 16.00%நகர்ப்புறம் 39.40%ஆதாரம்: புள்ளியியல் அமைச்சக தரவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை