உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி கெய்ன்ஸ் செமிகான் - சாஸ்த்ரா ஒப்பந்தம்

செமிகண்டக்டர் தொழில்நுட்ப பயிற்சி கெய்ன்ஸ் செமிகான் - சாஸ்த்ரா ஒப்பந்தம்

சென்னை:“செமிகண்டக்டர் தொழில் துறைக்கான மனித வளத்தை உருவாக்குவது, இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி வளர்ச்சி வெற்றிக்கு முக்கியமானது,” என, 'கெய்ன்ஸ் செமிகான்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரகு பனிக்கர் தெரிவித்தார்.செமிகண்டக்டர் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் அமைப்பதற்காக, கெய்ன்ஸ் செமிகான், பெர்செப்டிவ்ஸ் சொல்யூஷன் மற்றும் சாஸ்த்ரா பல்கலை இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களுக்கு செமிகண்டக்டர் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்படும்.சாஸ்த்ரா பல்கலை பட்டமளிப்பு விழாவில், கெய்ன்ஸ் செமிகான் தலைமை செயல் அதிகாரி ரகு பனிக்கர் பேசும்போது, “தற்போது, 47.22 பில்லியன் டாலராக உள்ள உலக செமிகண்டக்டர் பேக்கேஜிங் தொழில் துறை சந்தை, 2029ல், 79.37 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில், இந்தியாவின் பங்கு அதிகரிக்கும்,” என்றார்.பெர்செப்டிவ்ஸ் சொல்யூஷன் மேலாண் இயக்குனர் பானுபிரியா பேசும்போது, “செமிகண்டக்டர் பேக்கேஜிங் தொழில்நுட்பங்களில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்ய, இந்தியாவில் பயிற்சி பெற்ற மனிதவளம் ஒரு சொத்தாக இருக்கும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை