உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜி.டி.பி., வளர்ச்சி வலுவாக தொடரும் மத்திய நிதி அமைச்சகம் நம்பிக்கை

ஜி.டி.பி., வளர்ச்சி வலுவாக தொடரும் மத்திய நிதி அமைச்சகம் நம்பிக்கை

புதுடில்லி :நடப்பு நிதியாண்டில் நம்நாட்டின் வளர்ச்சிக்கான சூழல், வலிமையாக நீடிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கையில் கூறியதாவது: உள்நாட்டு தேவை, குறைவான அளவில் நீடிக்கும் பணவீக்கம், பணக்கொள்கையில் தளர்வு, ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் குறைக்கப்பட்ட வரி மற்றும் பொருட்கள் விலை குறைவால் அதிகரிக்கும் விற்பனை ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான அம்சங்கள். இதனால், 2025-26ம் நிதி ஆண்டில், ஜி.டி.பி., வளர்ச்சிக்கான சூழல் வலுவுடன் நீடிக்கிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் நிலையற்ற வர்த்தக கொள்கைகளுக்கு இடையே, நம் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படாமல், சீராக உள்ளது. குறிப்பாக, ஆகஸ்டு மாதத்தில் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நிலையிலும், இரண்டாம் காலாண்டு முதல் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப்., மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான தங்களது முந்தைய கணிப்பை அதிகரித்துள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை