உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலியையும், அவரது தந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

காதலியையும், அவரது தந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

புலந்ஷார் : உத்தர பிரதேச மாநிலம், நரோரா நகரில், திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் கொண்ட காதலன், தனது காதலி மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தர பிரதேச மாநிலம், நரோரா நகர், அனுவிஹார் காலனியைச் சேர்ந்தவர் பர்மேந்திரா, 25; பி.டெக்., படித்து வருகிறார். இவரது காதலி ஷிவானி, 25; எம்.பி.ஏ., படித்து வருகிறார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். ஷிவானியை திருமணம் செய்து கொள்ள பர்மேந்திரா வற்புறுத்தி வந்தார். ஆனால், இதற்கு சம்மதம் சொல்லாமல் ஷிவானி நாட்களை கடத்தி வந்தார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, ஷிவானியை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பர்மேந்திரா முடிவு கட்டினார். குடித்து விட்டு, ஷிவானியை மிரட்டுவதற்காக தனது தந்தையின் துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் ஷிவானியின் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன் அறையில் இருந்த ஷிவானியை பார்த்த பர்மேந்திரா, திருமணம் செய்து கொள்ளலாம் என்று மீண்டும் கட்டாயப்படுத்தினார். அவரை திருமணம் செய்து கொள்ள ஷிவானி மறுத்துவிட்டார்.

ஆத்திரமடைந்த பர்மேந்திரா, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் ஷிவானியை சுட்டார். ஷிவானி அலறியபடியே கீழே விழுந்து இறந்தார். ஷிவானியின் அலறல் சத்தத்தை கேட்டு, மற்றொரு அறையில் இருந்த அவரது தந்தை வெளியே வந்தார். ஆத்திரம் அடங்காமல் இருந்த பர்மேந்திரா, ஷிவானியின் தந்தையையும் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது வீட்டிற்கு தப்பி ஓடினார்.

வீட்டின் ஒரு அறைக்குச் சென்று, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ