உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பல் மருத்துவ கவுன்சில் மாஜி தலைவர் வீட்டில் ரெய்டு

இந்திய பல் மருத்துவ கவுன்சில் மாஜி தலைவர் வீட்டில் ரெய்டு

புதுடில்லி:இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் அனில் கோகில் வீட்டில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இந்திய பல் மருத்துவ கவுன்சில் தலைவராக, 2006 முதல் 2010ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் அனில் கோகில். பல்மருத்துவ கல்லூரிகள் தொடங்க, அனுமதியளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில், இவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, 2010ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அனில் மீதான புகார்களை விசாரிக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.இந்நிலையில், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள், அனில் கோகில் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை ஆறு இடங்களில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை