மும்பை குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையினருக்கு ராகுல் பாராட்டு
புவனேஸ்வர்: பாதுகாப்பு படையினரின் சிறப்பான செயல்பாடுகளால் 99 சதவீத பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுவிடுகின்றன என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தெரிவித்தார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மும்பை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் சிறப்பான செயல்பாடுகளால் நாட்டில் 99 சதவீத பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட்டுவிடுகின்றன. எனினும் இவை 100 சதவீதத்தை அடைவதே லட்சியம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்தையும் தடுப்பது மிகவும் சவாலானது என்று தெரிவித்த அவர், அவற்றிற்கு எதிராக நாம் போரிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.