உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

ஜானுபூர்:உத்திரப்பிரதேச மாநிலத்தில், பள்ளிக்கட்டடம் இடிந்து விழுந்து, 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவென்சா பகுதியில், நேற்று பள்ளிக்கூடக் கட்டடத்தை மின்னல் தாக்கியது. இதில், கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி, 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும், ஏழாம் வகுப்பு படிக்கும், 12 முதல் 13 வயது வரையிலான மாணவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ