உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு

நகரி:ஆந்திர கடல்எல்லைக்குள் நுழைந்து வலைகளை சேதப்படுத்தியதாக தமிழக மீனவர்கள் 42 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவளி அருகே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 42 பேர் 7 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது தங்களது மீன்பிடி வலைகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தியதாக கூறி, 42 பேரை ஆந்திர கடலோர மீனவர்கள் சிறைபிடித்து , காவளி கிராமத்தில் உள்ள ஒரு கோயில் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தகவலறிந்த சென்னை போலீசார் சம்பவ இடம் சென்றனர். இதில் ஆந்திர மீனவர்கள், தங்களது வலைகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தியதால் ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு கொடுத்தால் தமிழக மீனவர்களை விடுவிப்பதாக கூறிவருகின்றனர். மேலும் போலீசார் சமரசம் பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி